முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு! மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

யாருக்கு டிஸ்னி ஓடிடி? அதானியுடன் போட்டியிடும் கலாநிதி மாறன்!

டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தை வாங்க கலாநிதி மாறன், அதானி ஆகியோர் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :10 அக்டோபர் 2023, 1:02 pm

DIN

அமெரிக்காவின் வால்ட் டிஸ்னி நிறுவனம் ஹாட்ஸ்டார் நிறுவனத்தை வாங்கி, டிஸ்னி+ஹாட்ஸ்டார் என்கிற பெயரில் பல தொடர்களை, திரைப்படங்களை தன் ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகிறது.

இந்த ஓடிடி தளம் ஐபிஎல் போட்டிகளை வெளியிட்டு வந்ததால் இந்திய வர்த்தகத்திலும் தனக்கான சந்தையை வைத்திருந்தது. ஆனால், ஜியோ நிறுவனம் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தைப் பெற்ற பின் டிஸ்னி+ஹாட்ஸ்டார் நிறுவனம் தன் சந்தாதாரர்களைக் கடுமையாக இழந்தது.

இதன் காரணமாக, தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வருவதால் டிஸ்னி நிறுவனம் இந்தியாவில் அதன் வர்த்தகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் நிறுவனத்தை விற்பதற்கான பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்தியாவில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனத்தை வாங்க அதானி குழுமமும் கலாநிதி மாறனின் சன் டிவி குழுமமும் தீவிரமாக முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. பல கோடிகளில் நடைபெற இருக்கும் இந்த ஏலத்தில் யார் வெல்லப் போகிறார்கள் என்பதில் ஓடிடி உரிமையாளர்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

காரணம், இந்திய வர்த்தகத்தில் மிகப்பெரிய வணிகக் கட்டமைப்பை வைத்திருக்கும் அதானி, என்டிடிவி நிறுவனத்தைக் கைப்பற்றிய நிலையில் தன் கவனத்தை ஓடிடி பக்கம் திருப்பியிருப்பது சக போட்டியாளர்களிடம் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.