நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா!

நடிகர் அதர்வாவின் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா!

நடிகர் அதர்வா நடிப்பில் இறுதியாக வெளியான படங்கள் சரியான வரவேற்பைப் பெறவில்லை. இதனால், அதர்வாவின் சினிமா வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஹாட்ஸ்டாரில் வெளியான மத்தகம் தொடர், அவருக்கு ஓரளவு கவனத்தைக் கொடுத்தது. இருப்பினும், வெற்றிப்படத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் மான்ஸ்டர், ஃபர்ஹானா ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிக்கிறார். டிஎன்ஏ எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நிமிஷா சஜயன் நாயகியாகிறார். ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com