லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் அக். 5ஆம் தேதி வெளியானது. டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கவனம் ஈர்க்கும் சண்டைக்காட்சிகளையும் விஜய்யின் இரு வித்தியாசமான தோற்றத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதேநேரம், டிரைலரில் விஜய் பேசிய தகாத வார்த்தையும் சர்ச்சையானது. இந்நிலையில், யூடியூபில் வெளியான டிரைலரில் குறிப்பிட்ட அந்த வார்த்தையை ஓசையில்லாமல் (மியூட்) செய்துள்ளனர்.
இதையும் படிக்க: அஜித் படத்தில் இணையும் ரெஜினா!
முன்னதாக, நேர்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், “பார்த்திபன் கதாபாத்திரத்திற்குத் தேவைப்பட்டதால்தான் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன். இதற்கும் விஜய் அண்ணாவுக்கும் தொடர்பு இல்லை. இதனால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார். சில ரசிகர்கள் இக்கருத்தை ஏற்றுக்கொண்டாலும் அந்த வார்த்தைக்கான அர்த்தம் விஜய்க்கு தெரியாதா? ஒரு இயக்குநர் சொன்னாலும் உச்சத்தில் இருக்கும் நட்சத்திர நடிகர் இதைத் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன.
லியோ அக்.19 ஆம் தேதி உலகளவில் வெளியாக உள்ளதால், படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காந்தி டாக்ஸ் ஓடிடி தேதி!
துபையில் 2 சர்வதேச விமான நிலையங்களும் மூடல்: மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் செல்ல வேண்டாம்!

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள்

மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

