900 நாள்களைக் கடந்த அன்பே வா தொடர்!

மூன்று ஆண்டுகாளாக ஒளிபரப்பானாலும், டிஆர்பி பட்டியலில் இந்தத் தொடர் தொடர்ந்து முதல் 10 இடங்களில் ஒன்றாக இருக்கிறது. 
900 நாள்களைக் கடந்த அன்பே வா தொடர்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அன்பே வா தொடர் 900 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகிவருகிறது. 

சன் தொலைக்காட்சியில் சில தொடர்கள் நெடுந்தொடர்களாக மாறிவருகின்றன. அவை ஆண்டுகளைக் கடந்து ஒளிபரப்பானாலும் டிஆர்பி பட்டியலுலும், மக்கள் மனங்களிலும் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. 

அந்தவகையில் சன் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் அன்பே வா தொடர் 900 எபிஸோட்களை கடந்து ஒளிபரப்பாகிவருகிறது. 

2020 நவம்பர் முதல் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர் இந்த மாதத்துடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

சில தொடர்கள் ஓராண்டைக் கடந்து ஒளிபரப்பாகும்போது, அதன் பார்வையாளர்கள் குறைவது இயல்பு. கதாபாத்திரங்கள் அலுத்துப்போவதால், ரசிகர்கள் குறைந்து டிஆர்பியும் குறையும். 

ஆனால், மூன்று ஆண்டுகாளாக ஒளிபரப்பானாலும், டிஆர்பி பட்டியலில் இந்தத் தொடர் தொடர்ந்து முதல் 10 இடங்களில் ஒன்றாக இருக்கிறது. 

இந்தத் தொடரில் நடித்துவரும் டெல்னா டேவிஸ் - விராட் ஜோடியின் ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனனர். இவர்களுக்கு இடையிலான காதல் காட்சிகள் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com