

இறைவன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாராவும், ஜெயம் ரவியும் மீண்டும் சேர்ந்து நடித்த திரைப்படம் இறைவன்.
இப்படத்தை வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய ஐ.அஹமது இயக்கியுள்ளார். இப்படத்தில் நரேன், விஜயலட்சுமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்
இப்படம் கடந்த செப்.28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, கலவையான விமரிசனங்களைப் பெற்றது.
இதையும் படிக்க: விஜய் - 68 பூஜை விடியோ வெளியீடு!
இந்நிலையில், இறைவன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் அக்.26 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.