இளம் வயதினருக்கு மாரடைப்பு.. கமல்ஹாசன் அறிவுரை!

இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்பதற்கான அறிவுரையை நடிகர் கமல்ஹாச்ன் வழங்கியுள்ளார்.
இளம் வயதினருக்கு மாரடைப்பு.. கமல்ஹாசன் அறிவுரை!

நடிகர் கமல்ஹாசன் இயக்குநர்கள் வினோத், மணிரத்னம் ஆகியோர் படங்களில் நடிக்க உள்ளார். இதற்கிடையே, பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ‘சமீப காலமாக இளம் வயதைச் சேர்ந்த பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. 30 - 40 வயதுகளில் இப்பிரச்னை வருவது வியப்பாக இருக்கிறது. இதுகுறித்து என் மருத்துவ நண்பர்களிடம் பேசினேன். அவர்கள் இதற்கு மூன்று காரணங்களைக் கூறினர். உறக்கமின்மை, உணவுப் பழக்கம், செயலாற்றாமல் இருப்பது. இந்த 3 காரணங்களாலே பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படுகிறது. தூக்கத்திற்கும் உணவிற்கும் தொடர்பு இருக்கிறது. உணவே மருந்தாக இருக்க வேண்டும். மருந்து உணவாக இருக்கக் கூடாது. உடல் செயல்பாட்டுகளை நாம் செய்வதில்லை. அசையாமல் உருளைக்கிழங்குகளைப்போல் இருக்கிறோம். கிரிக்கெட் பார்ப்பதில் இருக்கும் ஆர்வம் விளையாடுவதிலும் இருக்க வேண்டும். ஓடி விளையாடு பாப்பா.. நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா. இளைஞர்கள் இதை கவனக்குறைவாக எடுத்துக்கொள்ளக் கூடாது.” என அறிவுரை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com