
தமிழில் வலம்வந்த நடிகை இந்துஜா நடிகர் ரவிதேஜாவுடன் இணையும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
மேயாத மான், மகாமுனி, பிகில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை இந்துஜா. குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவரும் இந்துஜா சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நடிகர் ரவிதேஜா நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் மூலம் நடிகை இந்துஜா தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் நடிகை இந்துஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் நடிகர் ரவிதேஜாவுடன் இயக்குநர் செல்வராகவன் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.