பிக் பாஸ் நிகழ்ச்சியில் புது திருப்பம்: ஸ்மால் பாஸ் வீட்டுக்குச் செல்லும் வைல்டுகார்டு போட்டியாளர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புது திருப்பமாக, வைல்டுகார்டு போட்டியாளர்கள் 5 பேரும் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பட்டு உள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் புது திருப்பம்: ஸ்மால் பாஸ் வீட்டுக்குச் செல்லும் வைல்டுகார்டு போட்டியாளர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புது திருப்பமாக, வைல்டுகார்டு போட்டியாளர்கள் 5 பேரும்  ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பட்டு உள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இதனிடையே முதல் வார எவிக்‌ஷனில் அனன்யாவும், இரண்டாவது வாரத் தொடக்கத்தில் உடல்நிலை சரியில்லாததால் பவா செல்லதுரையும், மூன்றாவது வாரம் விஜய் வர்மாவும், இந்த வாரம் வினுஷா மற்றும் யுகேந்தரனும்  வெளியேறியுள்ளனர்.

கடந்த சீசன்களை போல் இல்லாமல் பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என வீடுகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால்  இரு வீட்டாருக்கு இடையே கடும் போட்டி, சண்டை நிலவி வருகிறது.

இந்த வார இறுதி நாள் நிகழ்ச்சியில் வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர்.

இந்த நிலையில், இந்த வார கேப்டனாக தேர்வாகியுள்ள பூர்ணிமா, வைல்டுகார்டு போட்டியாளர்கள் 5 பேர் மற்றும் விசித்ராவை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் பிக் பாஸ் மற்றும் ஸ்மால் வீட்டாருக்கிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com