
பாவம் கணேசன் தொடரில் முன்னணி பாத்திரத்தில் நடித்த நடிகை ஷிமோனா ஜேம்ஸுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாவம் கணேசன் தொடரில் நடித்துவருபவர் நடிகை ஷிமோனா ஜேம்ஸ். இவரி பாவம் கணேசன் தொடரில் பிரியா என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இத்தொடரின் நாயகனாக நவீன், நாயகியாக நேகா ஆகியோர் நடித்துவருகின்றனர். இந்தத் தொடரில் முக்கிய பாத்திரத்தில் ஷிமோனா நடித்து வருகிறார்.
ஷிமோனா தனது ஆரம்பகாலகட்டங்களில், இசை ஆல்பம்களில் நடித்துவந்தார். அதன் விளைவாக பாவம் கணேசன் தொடரில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இவர் நாயகி தொடரிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இவர் கிரண் நேதனல் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். ஷிமோனாவும் கிரண் நேதனலும் நீண்ட நாள் நண்பர்கள். இவர்களின் காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.
இவர்களின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. சின்னத்திரை பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.