ரூ.2.70 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய ஃபஹத் ஃபாசில்! கேரளத்திலேயே முதல் ஆளாம்!

நடிகர் ஃபகத் ஃபாசில் கேரளத்திலேயே முதல் ஆளாக லாண்ட்ரோவர் ரக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
ரூ.2.70 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய ஃபஹத் ஃபாசில்! கேரளத்திலேயே முதல் ஆளாம்!
Published on
Updated on
1 min read

நடிகர் ஃபஹத் ஃபாசில் மலையாளத்திலும் தமிழிலும் சேர்த்து 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தன் அசாத்தியமான நடிப்பால் தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது, கேரள மாநில விருதுகள் என பல்வேறு படங்களுக்கு பல விருதுகளை குவித்துள்ளார். 

குறிப்பாக, இவர் நடிப்பில் வெளியான, ‘மகேஷிண்ட பிரதிகாரம்’, ‘தொண்டிமுதலும் த்ரிக்சாட்சியும்’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஜோஜு’ ஆகிய படங்களில் தன் நடிப்புத் திறனால் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழத்தினார். 

சமீபத்தில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் ரத்னவேலு கதாபாத்திரத்தில் மிரட்டியெடுத்து இந்திய அளவில் டிரெண்டிங்கில் இடம்பிடித்தார்.

இந்நிலையில், ஃபஹத் ஃபாசில் தன் திருமணநாளன்று ரூ.2.70 கோடி மதிப்புள்ள லேண்ட்ரோவர் டிஃபெண்டர் 90 (landrover defender 90) ரக சொகுசுக் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இவரே கேரளத்தில் இந்த ரகக் காரை முதலில் வாங்கிய நபர் என விற்பனை நிறுவனம் அறிவித்துள்ளது! 

ஏற்கனவே, ஃபஹத் தன் வீட்டில் போர்ச், மினி கன்ட்ரிமேன், லம்போகினி உரூஸ், ரேஞ்ச் ரோவர், பிஎம்டபிள்யூ 740ஐ உள்ளிட்ட சொகுசுக் கார்களை வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com