மீண்டும் நாக சைதன்யாவுடன் இணையும் குஷி பட இயக்குநர்! 

குஷி பட இயக்குநர் ஷிவா நிர்வாணா மீண்டும் நாக சைதன்யாவுடன் இணைந்து படம் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 
மீண்டும் நாக சைதன்யாவுடன் இணையும் குஷி பட இயக்குநர்! 

சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான குஷி படத்தினை இயக்கியவர் ஷிவா நிர்வாணா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஹீஷம் அப்துல் வாஹித் இசையமைத்துள்ளார். இதற்கு முன்னதாக ஷிவா நிர்வாணா இயக்கிய மஜிலி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்.1ஆம் தேதி குஷி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. வெற்றி விழாவினையும் படக்குழு சமீபத்தில் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. 

மஜிலி படப்பிடிப்பில் சமந்தா - நாக சைதன்யாவுடன் இயக்குநர் ஷிவா நிர்வாணா மற்றும் படக்குழுவினர். 
மஜிலி படப்பிடிப்பில் சமந்தா - நாக சைதன்யாவுடன் இயக்குநர் ஷிவா நிர்வாணா மற்றும் படக்குழுவினர். 

தற்போது இயக்குநர் ஷிவா நிர்வாணா நேர்காணல் ஒன்றில், “அடுத்தபடம் நடிகர் நாக சைதன்யாவுடன்தான். அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் முடிவடையவில்லை. நாக சைதன்யா எனக்கு நல்ல நண்பர்” எனக் கூறியிருந்தார். மேலும் சமந்தா நாக சைதன்யா குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது, “அது அவர்களின் சொந்தப் பிர்சனை. இருவரிடமும் பணியாற்றினாலும் அது குறித்து கேள்வி எழுப்புவதில்லை” எனக் கூறினார். 

மஜிலி திரைப்படம் சமந்தா நாக சைதன்யா இணைந்து நடித்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகும். தற்போது மீண்டும் நாக சைதன்யாவுடன் இணையும் ஷிவா நிர்வாணா படத்தில் சமந்தா இணைவாரா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com