அசோக் செல்வன் திருமணம்: வைரலாகும் பசுமை விருந்து பட்டியல்!

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண விழாவில் பரிமாறப்பட்ட பசுமை விருந்து பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அசோக் செல்வன் திருமணம்: வைரலாகும் பசுமை விருந்து பட்டியல்!

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண விழாவில் பரிமாறப்பட்ட பசுமை விருந்து பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக அறியப்படுவர் அசோக் செல்வன். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

இவருக்கும், நடிகர் அருண் பாண்டியனின் மூன்றாவது மகளான நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும்  திருமணம் புதன்கிழமை நடைபெற்றது. ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்தபோது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னர் அதுவே நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவர்களின் திருமண விழாவில் பரிமாறப்பட்ட பசுமை விருந்து பட்டியல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. 

அதன்படி, இருட்டுக்கடை அல்வா, நீர் தோசை, நெல்லிக்காய் சட்னி, திணை பொங்கல், புளி மிளகாய் போன்ற வித்தியசமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

இவர்களின் திருமண அழைப்பிதழில் பசுமை விருந்து கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com