சாந்தனு - ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மை 3 வெப் தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமடைந்தவர் இயக்குநர் எம்.ராஜேஷ். இவர் புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கியுள்ளார்.
இந்த வெப் தொடரில் சாந்தனு, ஹன்சிகா, ஜனனி, முகின் ராவ், அஷ்னா ஜவேரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரொமான்டிக் காமெடி ஜானரில், ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் விதத்தில் இந்தத் தொடர் உருவாகியுள்ளது.
இதையும் படிக்க: ரத்தம் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு!
இந்த நிலையில், மை 3 வெப் தொடர் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதற்கான முன்னோட்ட விடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.