நட்புதான் சொத்து நமக்கு... சின்னத்திரை நடிகர்களின் சங்கமம்!!

சுந்தரி, ஆனந்தராகம், பாண்டவர் இல்லம், மிஸ்டர் மனைவி ஆகிய தொடர்களில் நடித்துவரும் முன்னணி நடிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
நட்புதான் சொத்து நமக்கு... சின்னத்திரை நடிகர்களின் சங்கமம்!!


சின்னத்திரை நடிகர்கள் குழுவாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பிரண்ட்ஷிப் என்ற ஹேஷ்டேக் உடன் அவர்கள் பதிவிட்டுள்ள படத்தில், அவர்களில் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களை மக்களிடம் மேலும் கொண்டுசேர்க்கும் வகையில் சன் நட்சத்திரக் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. 

இதில், சின்னத்திரை நடிகர்களை அந்த கதாபாத்திரங்களாகவே மக்களுடன் உரையாடல் நடத்துவதாலும், மக்கள் மனம் கவர்ந்த சின்னத்திரை ஜோடிகள் பாட்டு, நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதாலும் சன் நட்சத்திர கொண்டாட்டத்துக்கு மக்கள் ஆதரவும் அதிகம். 

அந்தவகையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சின்னத்திரை நடிகர்கள் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சுந்தரி, ஆனந்தராகம், பாண்டவர் இல்லம், மிஸ்டர் மனைவி ஆகிய தொடர்களில் நடித்துவரும் முன்னணி நடிகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பியபோது புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

விமானத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், விமான நிலையத்துக்கு வெளியே எடுத்துக்கொண்ட குழு புகைப்படங்களையும் ஃபிரண்ஷிப் எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com