சினிமாத் துறையில் சிலர்தான் இப்படி: தனுஷை புகழ்ந்த நடிகை ராதிகா! 

சினிமாத் துறையில் சிலர்தான் இப்படி: தனுஷை புகழ்ந்த நடிகை ராதிகா! 

நடிகை ராதிகா தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் நடிகர் தனுஷ் குறித்து புகழ்ந்து பதிவிட்டுள்ளார். 
Published on

கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ராதிகா. 80 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தற்போதும் முக்கியமான கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்களுடன் பிஸியாக நடித்து வருகிறார்.  

சினிமா மட்டுமின்றி சீரியலையும் தயாரிக்கும் நடிகை ராதிகா, நடிகர் சரத்குமாரை பிப்ரவரி 2001இல் திருமணம் செய்தார். தற்போது ராதிகா சரத்குமார் புதிய வீடு ஒன்றினை கட்டி சமீபத்தில் குடி புகுந்தார்கள். இதற்கு தமிழ் சினிமா பிரபலங்கள் மீனா, தனுஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

இது குறித்து ராதிகா தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “சினிமாத்துறையில் சிலர்தான் இப்படி சிறப்பான உறவுடன் பழகுவார்கள். இதில் தனுஷும் ஒருவர்” எனப் பதிவிட்டுள்ளார்.

5 வாரங்கள் முன்பு ராதிகா சினிமா துறையில் 45 ஆண்டுகளை நிறைவு செய்ததும் குறிப்பிடத்தக்கது. 

தனுஷுடன் நடிகை ராதிகா தங்க மகன் படத்தில் அம்மாவாக நடித்திருந்தார்.

தனுஷ் கேப்டன் மில்லர் படப்பிடிப்பினை முடித்து தற்போது தனது 50வது படத்தினை தானே இயக்கி நடித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com