பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோவையில் ரஜினிகாந்த்!

கோவை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சூலூரில் நடைபெறும் குடும்ப நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க கோவை வந்தாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :17 செப்டம்பர் 2023, 7:56 am

DIN

கோவை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சூலூரில் நடைபெறும் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்தாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

நடிகர் ரஜினி காந்த் சூலூரில் நடைபெற உள்ள தனது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மனைவி லதாவுடன் கோவை வந்தடைந்தார். நடிகர் ரஜினிகாந்த் வருவதை அறிந்த அவரது ரசிகர்கள் விமான நிலையம் முன்பாக கூடியிருந்தனர்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு சரியாக 11.30 மணிக்கு வெளியே வந்த அவரை, ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நடிகர் ரஜினி காந்த் பதிலளிக்க தயாரான நிலையில், கூட்ட நெரிசலால் அவரால் சரிவர பதிலளிக்க முடியவில்லை. ஓரிரு வார்த்தைகளாக தனது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவை வந்துள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார். 

இதனையடுத்து காரின் மேல் நின்றவாறு ரசிகர்களுக்கு கையசைத்து அங்கிருந்து விடை பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.