நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!
Updated on
1 min read

1955 ஆம் ஆண்டு ’ரோஜுலு மராயி’ என்கிற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வஹீதா ரஹ்மான். அதன்பின், ஹிந்தியில் ‘பைசா’, ‘கைடு’, ‘ககாஸ்ஹே போல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிகச்சிறந்த கவனத்தைப் பெற்றார். 

குறிப்பாக, 1956-ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். 

90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த வஹீதா சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ஒருமுறையும் மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவருக்கு மத்திய அரசு, 1972-ல் பத்ம ஸ்ரீ விருதையும் 2011-ல் பத்ம பூஷண் விருதையும் வழங்கி கௌரவித்தது.

இந்நிலையில், இன்று வாழ்நாள் சாதனையாளர்களுக்கான தாதா சாகேப் பால்கே விருது வஹீதா ரஹ்மானுக்கு(85) அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com