பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய திரைப்படங்கள் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அவை எந்தெந்த திரைப்படங்கள் என்பதைக் காண்போம்.
சந்திரமுகி - 2
சந்திரமுகி படத்தின் 2ஆம் பாகம் நாளை(செப்.28) வெளியாகிறது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இறைவன்
தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாராவும் ஜெயம் ரவியும் மீண்டும் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் இறைவன். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்துக்கு தணிக்கைத் துறையினர் ’ஏ’ சான்றிதழை வழங்கியுள்ளனர். ரன்னிங் டைம் 2மணி நேரம் 33 நிமிடங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் நாளை(செப்.28) தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
சித்தா
சு.அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், ‘சித்தா’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். சித்தப்பா உறவினை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை(செப்.28) வெளியாகிறது.
இதையும் படிக்க: சமந்தாவின் குஷி: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
பார்க்கிங் திரைப்படம் நாளை வெளியாக இருந்த நிலையில், வெளியீட்டுத் தேதியை படக்குழு ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.