தணிக்கைத் துறையினர் லஞ்சம் கேட்டனர்.. விஷால் விடியோவால் பரபரப்பு!

மார்க் ஆண்டனி திரைப்படத்திற்காக மும்பை தணிக்கைத் துறையினர் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் குற்றம் சாட்டியுள்ளார்.
தணிக்கைத் துறையினர் லஞ்சம் கேட்டனர்.. விஷால் விடியோவால் பரபரப்பு!

விஷால் நடிப்பில் செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பினை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம் நேற்று ஹிந்தி மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 

இந்நிலையில், மகாராஷ்டிராவில் இப்படத்தின் டப்பிங் மற்றும் திரையிடலுக்காக அதிகாரிகள் தன்னிடம் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் படம் வெளியாக வேண்டும் என்பதால் இரண்டு பரிவர்த்தனைகளாகக் கேட்ட தொகையைக் கொடுத்ததாகவும் விஷால் தெரிவித்துள்ளார். 

மேலும், அவர் வெளியிட்ட விடியோவில், “சினிமாவில் ஊழல் காட்டப்படுவது வேறு. ஆனால், நிஜ வாழ்வில் ஊழல் நடப்பது வேறு. இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மும்பை சென்சார் போர்ட் அதிகாரிகள் இன்னும் மோசமாக இருக்கிறார்கள். எங்கள் மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஹிந்தியில் வெளியிட வேண்டும் என்பதற்காக டப்பிங்  மற்றும் திரையிடலுக்காக ரூ.3 லட்சத்தை ஒருமுறையும் ரூ.3.5 லட்சத்தை மற்றொரு பரிவர்த்தனையுமாக மும்பை தணிக்கைத்துறை அதிகாரி மேனகாவுக்கு வழங்கினேன். என் சினிமா வாழ்வில் இப்படியான சூழலை எதிர்கொண்டதில்லை. இதை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கும் கொண்டு வருகிறேன். எப்போதும்போல் உண்மை வெல்லும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

விஷால் வெளியிட்ட இந்த விடியோ சினிமா துறையினரிடம் மட்டுமன்றி பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com