

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ பட சென்சார் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் லியோ. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் பிரமாண்ட பொருட் செலவில் தயாரித்துள்ளது. படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதால் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கெனவே படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் படத்திற்கான சென்சார் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.