
தமிழின் முக்கியமான இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரமாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நாயகியாக நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்திருந்தார்.
இந்தப் படம் ரூ.28 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெற்றியினால் இயக்குநர் வெற்றி மாறனும் படக்குழுவினருக்கு தங்கக் காசுகளை பரிசாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தினை இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
ஒரு திரைப்படம் கவனம் பெறுவதில் வணிகம் தாண்டி கலாபூர்வமான ஒரு நன்மை இருக்கிறது. அந்த நன்மை என்பதுதான் இங்கு சிறப்பானது. அது நண்பர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் நிகழ்ந்திருக்கிறது; அது தம்பி சூரியை சிறந்த நடிகனாக, நாயகனாக தந்திருக்கிறது. வாழ்த்துகள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...