
மணிகண்டனின் 'குட் நைட்' படத்தின் டீசர் வெளியானது.
அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கும் 'குட் நைட்' படத்தில் 'ஜெய் பீம்' பட பிரபலம் மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் முடிவடைந்த நிலையில், தற்போது படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த டீசரில், குறட்டையானது மணிகண்டனின் வாழ்க்கையிலும், அவரது வாழ்வில் உள்ளவர்களிடமும் எவ்வாறு தொந்தரவான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை தெரிவித்துள்ளனர்.
'முதல் நீ முடியும் நீ' பிரபலம் மேத்தி ரகுநாத் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரமேஷ் திலக், பகவதி பெருமாள் என்ற பக்ஸ், பாலாஜி சக்திவேல் மற்றும் ரேச்சல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, தொழில்நுட்பக் குழுவில் ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவும், பரத் விக்ரமன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...