
இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை தழுவி உருவாகும் ‘800’ படத்திற்கு புதிய நாயகரைப் படக்குழு தேர்வு செய்துள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி சாதனை புரிந்ததால் அவரின் வாழ்க்கை வரலாறு ‘800’ என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகிறது.
இப்படத்திற்கு முதலில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், ஈழப்போர் பிரச்னையில் தமிழரான முத்தையா முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் என்பதால் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கக் கூடாது என தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்தது. இதனால், விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகினார்.
இந்நிலையில், 800 படத்தின் நாயகனாக ஆஸ்கர் விருது பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் நடித்த மதூர் மிட்டல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
https://youtube.com/shorts/hHWN4fXAVIo?feature=share