
நடிகர் அஜித் குமாரின் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
துணிவு படத்திற்குப் பின் நடிகர் அஜித் குமார் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே ஆவல் எழுந்துள்ளது. ஏகே 62-வாக உருவாகும் இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது.
ஆனால், அவர் இப்படத்திலிருந்து விலகிக்கொண்டார். இந்நிலையில், ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 1 ஆம் தேதி அஜித் குமார் பிறந்தநாளன்று வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.