
விடுதலை திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டில் மேலும் சில காட்சிகளை இணைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரமாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி வெளியீட்டில் மேலும் 20 நிமிடக் காட்சிகளை இணைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...