எப்போதும் வேலை அல்லது உடற்பயிற்சி: மாளவிகா மோகனன் 

பிரபல நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது. 
எப்போதும் வேலை அல்லது உடற்பயிற்சி: மாளவிகா மோகனன் 

தமிழில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் மூலம் நடிகையாக  அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் பெரும் வெற்றிபெற்றது. தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். 

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படத்திற்கு என்றே தனியான ரசிகர்கள் இருக்கிறது.  

உடலை எப்போதும் ஃபிட்னஸாக வைத்துக்கொள்வதில் மாளவிகாவிற்கு அதிக விருப்பம். அடிக்கடி உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் விடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று பதிவிட்ட உடற்பயிற்சி புகைப்படங்கள் 3 இலட்சத்திற்கும் அதிகமான லைக் பெற்றுள்ளது. 

இந்தப் புகைப்படத்தின் கீழ் மாளவிகா, “எப்போதும் வேலை அல்லது உடற்பயிற்சி” என பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் தீ எமோஜிக்களை கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com