
மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
டாக்டர், டான் வெற்றிப் படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் ஒப்பந்தமானார். ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கிறார்.
மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். பரத் சங்கர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான ப்ரின்ஸ் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதனால் இந்த மாவீரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் படக்குழு இன்று முக்கிய அப்டேட் வெளியாகுமென எடிட்டிங்கில் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளனர்.
படத்தின் ரிலீஸ் தேதி பற்றி அறிவிக்கப்படுமென ரசிகர்கள் ட்விட்டரில் மாவீரன் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.