பிரபல செய்தி வாசிப்பாளரின் புதிய சீரியல்!

நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவருக்கு 2017ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நெஞ்சம் மறப்பதில்லை தொடர் மூலம் நடிகையாக அறிமுகமானார். 
 சரண்யா துராடி (கோப்புப் படங்கள்)
 சரண்யா துராடி (கோப்புப் படங்கள்)
Published on
Updated on
1 min read


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வைதேகி காத்திருந்தாள் தொடரில் நடித்ததைத் தொடர்ந்து தற்போது புதிய தொடரில் நடிகை சரண்யா துராடி நடிக்கவுள்ளார். 

இவர் இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து, ரன், நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். 

செய்திவாசிப்பாளராகவும் செய்தியாளராகவும் இருந்தவர் சரண்யா துராடி. நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவருக்கு 2017ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நெஞ்சம் மறப்பதில்லை தொடர் மூலம் நடிகையாக அறிமுகமானார். 

அந்தத் தொடரில் நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு ரோஜா தொடரில் நடித்தார். இந்தத் தொடர் ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 

பின்னர், அதே ஆண்டில் சன் தொலைக்காட்சியில் ரன் தொடரில் நாயகியாக நடித்தார். 2020ஆம் ஆண்டு ஆயுத எழுத்து தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். 2022 வரை வைதேகி காத்திருந்தால் தொடரிலும் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். 

தற்போது நடிகை சரண்யா துராடி புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தொடர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொலைக்காட்சி நிறுவனம் விரைவில்
வெளியிடவுள்ளது. 

இவர் மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com