
இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் நாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாவீரன் திரைப்படத்தின் வெற்றியால், முன்னணி இடத்தை தக்கவைத்துள்ள சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அந்தவகையில், இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. தற்போது சாய் பல்லவியுடன் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார்.
இந்நிலையில், முருகதாஸ் இயக்கவுள்ள படத்தின் நாயகியாக மிருணாள் தாக்குர் நடிக்கவுள்ளார். தற்போது ஹிந்தி திரைப்படங்களில் தீவிரமாக நடித்துவரும் மிருணாள், ஓரிரு வாரங்களில் சிவகார்த்தியேகன் உடனான படத்தில் கையெழுத்திடவுள்ளார்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து முடித்ததும், முருகதாஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.
இதனால், படக்குழு முன்னோட்ட பணிகளை மேற்கொண்டுள்ளது. மேலும், சிவகார்த்திகேயன் - முருகதாஸ் இணையும் புதிய படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முருகதாஸ் இயக்கிய கத்தி, தர்பார் உள்ளிட்ட படங்களுக்கு அனிருத் ஏற்கெனவே இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...