
வெங்கட் பிரபு தயாரிக்கும் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தின் முதல் பார்வை போஸ்டரை, நடிகர் சிம்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார்.
இந்தப் படத்தை மீசையை முறுக்கு பட நடிகர் ஆனந்த் நடித்து, இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கலக்கப்போவது யாரு பாலா, ஆர்.ஜே.விஜய், குமரவேல், பவானி ஸ்ரீ, இர்பான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ள இப்படத்தை ஒயிட் ப்லிம் ஸ்டுடியோஸ், மசாலா பாப்கார்ன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், முதல் பார்வை போஸ்டரை, நடிகர் சிம்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார்.
இதையும் படிக்க: சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக முதல் பாடலை எழுதியுள்ளேன்: விக்னேஷ் சிவன்
இப்படம் நண்பர்கள் தொடர்புடைய படம் என்பதால், இன்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு முதல் பார்வை வெளியாகவுள்ளது.
The poster campaign continues but this time it’s ours! Yes! #NOVPFirstLook will be unveiled by epitome of friendship @SilambarasanTR_ Thank you for doing this bro #NanbanOruvanVanthaPiragu produced by @Aishwarya12dec @masala_popcorn @studios_white A Life by @ActorAnanth… pic.twitter.com/igKAXWg2Wi
— venkat prabhu (@vp_offl) August 6, 2023
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...