மீண்டும் சீரியலில் களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம்!
மீண்டும் சீரியலில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ரச்சிதா மகா லட்சுமி.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். தொடர்ந்து, நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்தார். பின்பு, அந்த தொடரிலிருந்து பாதியில் வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரச்சிதா, சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அதைப்பற்றிய அறிவிப்பை இதுவரை அவர் வெளியிடவில்லை.
இதையும் படிக்க: ஜெயிலர் குறித்து தனுஷின் ட்வீட் வைரல்!
இந்நிலையில், ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், போலீஸ் உடையணிந்து கெத்தான விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் மீண்டும் ரச்சிதா வருகைக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.