
நடிகர் விஜய் சேதுபதி தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்தவர் தற்போது பாலிவுட்டில் கவனத்தைத் திருப்பியுள்ளார்.
இவர் நடிப்பில் ஹிந்தியில் உருவான ’மும்பைக்கார்’, ‘மேரி கிறிஸ்துமஸ்’, ‘ஜவான்’ ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. இதில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்துள்ளார்.
மேலும், அமேசான் பிரைமில் வெளியான ‘ஃபார்ஸி’ இணையத் தொடரில் நடித்து வரவேற்பைப் பெற்றிருந்தார்.
இதையும் படிக்க: விஜய் - 68.. வாழ்த்துத் தெரிவித்த அஜித்!
இந்நிலையில், நடிகர் சல்மான் கான் புதிதாக நடிக்கவுள்ள திரைப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.