நடிகை லட்சுமி மேனனுடன் நடிகர் விஷால் திருமணம் என பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் விஷால்.
இது குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில்,
பொதுவாக என்னைப் பற்றிய எந்த போலிச் செய்திகள் அல்லது வதந்திகளுக்கும் நான் பதிலளிப்பதில்லை, அது பயனற்றது என்று என தெரியும். ஆனால் இப்போது நடிகை லட்சுமி மேனனுடன் எனக்கு திருமணம் என பரவிவரும் செய்தியை நான் முற்றிலுமாக மறுக்கிறேன், இது முற்றிலும் ஆதாரமற்றது.
இந்த வதந்தி செய்திக்கு நான் பதிலளிக்கக் காரணம், நடிகை என்பதை தாண்டி, முதலில் அவர் ஒரு பெண், நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைத்து, அவருடைய அடையாளத்தை கெடுக்கிறீர்கள்.
எதிர்காலத்தில் நான் யாரை திருமணம் செய்யப்போகிறேன் என்பதை காலமும், நேரமும் கணிக்க முடியாது, நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.
என நடிகை லட்சுமி மேனனுடன் தனக்கு திருமணம் என சமூக வலைத்தங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் விஷால்.