கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ரோலக்ஸா? இரும்புக் கை மாயாவியா?: நடிகர் சூர்யா கூறிய வைரல் அப்டேட்!

நடிகர் சூர்யா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:48 am

DIN

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யுடன் லியோ படத்தினை இயக்கி முடித்துள்ளார். 

இதையும் படிக்க: விஜய் 68: கதாநாயகியாக ஜோதிகா? 

சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ், தன் கனவுப்படமாக ‘இரும்புக் கை மாயாவி’ படத்தைக் குறிப்பிட்டுள்ளார். மாநகரம் திரைப்படத்திற்குப் பின் நடிகர் சூர்யாவை வைத்து லோகேஷ் ‘இரும்புக் கை மாயாவி’ படத்தை இயக்க திட்டமிட்டார். ஆனால், இது சூப்பர் ஹீரோ கதை என்பதால் படத்தின் உருவாக்க சவால்களால் அதனைக் கைவிட்டார். இது உருவாக நீண்ட ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Story image

தற்போது ரஜினி 171 படத்திற்காக திரைக்கதை அமைக்கும் பணியில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Story image

இந்நிலையில் நடிகர் சூர்யா ரசிகர்கள் சந்திப்பின்போது, “விடுதலை2 படப்பிடிப்பு முடிந்து வாடிவாசல் நடைபெறும். சூர்யா 43 அக்டோபரில் துவங்க உள்ளது. ரோலக்ஸ் கதை தனிப்படமாக உருவாக உள்ளது. லோகேஷ் இது குறித்து கதை கூறியுள்ளார். எனக்கு பிடித்துள்ளது. விரைவில் நடக்கும். இரும்புக்கை மாயாவி ரோலக்ஸ்க்குப் பிறகு நடக்குமெனவும்” கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.