வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஜெயிலர் ரஜினியின் மருமகள்: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகை மிர்ணா!

ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை மிர்ணா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். 

News image
Updated On :13 ஆகஸ்ட் 2023, 9:21 am

மோகன்லாலுடன் பிக் பிரதர் எனும் மலையாளப் படத்தில் முதன்முறையாக அறிமுகமானார் நடிகை மிர்ணா மேனன். தற்போது தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார். 

நடிகர் மோகன்லாலுடன்... 

நடிகர் மோகன்லாலுடன்... 

புர்கா எனும் திரைப்படத்தில் நஜ்மா எனும் முஸ்லீம் பெண் கதாபாத்திரத்தில் நடித்து ஆதரவினையும் விமர்சனங்களையும் சந்தித்தார். அனந்தம் எனும் இணையத்தொடரிலும் நடித்துள்ளார்.

புர்கா படத்தின் காட்சி... 

புர்கா படத்தின் காட்சி... 

சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக ஸ்வேதா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜெயிலர் படத்ட்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன. இதில் நடித்த மிர்ணாவுக்கு மீம்ஸ் கிர்யேட்டர்கள் சமூக ஊடகங்களில் பல ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். 

நடிகர் ரஜினியுடன்... 

நடிகர் ரஜினியுடன்... 

உங்களை பொண்ணு கேட்டு வரவா என மீம்ஸ்கள் இணையத்தில் அதிகமாக தென்பட்டன.  “பெரிய டைனோஸர் பார்த்தா மட்டும்தான் பயம். மத்தபடி ஐ லவ் யூ” என ஜெயிலர் வசனங்களை கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர். 

Story image

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயிலர் முதல்நாள் படப்பிடிப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். இதில் ரசிகர்களுக்கும் நடிகர் ரஜினிக்கும் இயக்குநர் நெல்சனுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.