
கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது.
லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் - 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | இறைவன் வெளியீட்டுத் தேதி மாற்றம்?
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாகவும் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று இப்படத்தின் சிறப்புப் போஸ்டரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
‘சேனாதிபதி’ கமல் தோற்றத்தில் வெளியான இந்தப் போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...