
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நாயகனாக நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன் 2’, கொலை’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன.
இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ‘ரோமியோ’ என்கிற காதல் படமொன்றில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். நாயகியாக மிருணாளினி ரவி ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இதையும் படிக்க: படப்பிடிப்பில் விபத்து: சஞ்சய் தத்துக்கு தலையில் காயம்!
விஜய் ஆண்டனியே தயாரிக்கும் இப்படம் அடுத்தாண்டு(2024) கோடை வெளியீடாக திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.