புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இணையத்தில் வைரலாகும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண அழைப்பிதழ்!

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக வந்த தகவலைத் தொடர்ந்து இவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2023, 10:26 am

DIN

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக வந்த தகவலைத் தொடர்ந்து இவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக அறியப்படுவர் அசோக் செல்வன். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

இவருக்கும், நடிகர் அருண் பாண்டியனின் மூன்றாவது மகளான நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் அடுத்த மாதம் திருநெல்வேலியில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

Story image

இந்த நிலையில், இவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அழைப்பிதழில், செப்டம்பர் 13 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் இட்டேரியில் உள்ள சேது அம்மாள் பண்ணை இல்லத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், திருமணம் முடிந்ததும் அனைவருக்கும் பசுமை விருந்து கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.