எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கார்த்தி படத்தில் ராஜ்கிரண்!

நடிகர் கார்த்தி நடித்து வரும் புதிய படத்தில் ராஜ்கிரண் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2023, 9:40 am

DIN

நடிகர் கார்த்தி நடிப்பில் விருமன், சர்தார், பொன்னியின் செல்வன்  படங்கள் வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்றது.

அதன்பின், ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இது கார்த்தியின் 25-வது படமாகும்.

தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். 

இப்படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிகர் சத்யராஜ் நடித்து வருவதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் ராஜ்கிரண் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கார்த்தி - ராஜ்கிரண் நடிப்பில் உருவான ‘கொம்பன்’, ‘விருமன்’ ஆகிய படங்களில் இருவரின் கதாபாத்திர உருவாக்கம் சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.