
இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்கத்தில் நடிகர் அஸ்வின் நடித்துள்ள பீட்சா 3 திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த பீட்சா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா 2 திரைப்படம் வெளியானது.
இந்நிலையில் நடிகர் அஸ்வின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பீட்சா 3. இப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், பவித்ரா, கவுரவ் நாரயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பீட்சா 3 திரைப்படம் கடந்த ஜூலை 28 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி, கலவையான விமரிசனங்களைப் பெற்றது.
இதையும் படிக்க: விமலின் துடிக்கும் கரங்கள் டிரைலர் வெளியானது!
இந்த நிலையில், பீட்சா 3 திரைப்படம் சிம்பிளி செளத்(Simply South) ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.