
சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். பின்பு தானா சேர்ந்த கூட்டம், நானும் ரெளடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கினார்.
இது தவிர தயாரிப்பு, பாடலாசிரியர் என பலமுகங்கள் விக்னேஷ் சிவனுக்கு உண்டு. அஜித்தை வைத்து இயக்கவிருந்த திரைப்படம் பாதியில் நின்று போன நிலையில், அடுத்த திரைப்படம் குறித்த தகவலை விக்னேஷ் சிவன் இதுவரை வெளியிடவில்லை.
இதையும் படிக்க: என்னிடம் இதுவரை யாரும் காதலை கூறியதே இல்லை: நடிகை ஸ்ரீ லீலா வருத்தம்!
இதையும் படிக்க: புராரி மரணம்: காவல்துறை அதிகாரியாக தமன்னா!
இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர்.
இதையும் படிக்க: குழந்தைகளுடன் சைக்கிள் ஓட்டிய அஜித்தின் வைரல் விடியோ!
இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்ப புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதில் ரத்தமாரே என்ற பாடலை பதிவில் இணைத்துள்ளார். இந்தப் பாடல் ஜெயிலர் படத்திற்காக விக்னேஷ் சிவன் எழுதியது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...