
தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.
இதையும் படிக்க: குழந்தைகளுடன் சைக்கிள் ஓட்டிய அஜித்தின் வைரல் விடியோ!
தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் போலா ஷங்கர், ஜெயிலர், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய படங்கள் வெளியாகின.
இதையும் படிக்க: சினிமா நபர்கள் குறித்த எனது பார்வையை மாற்றியவர் தமன்னா: விஜய் வர்மா
தற்போது காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள தமன்னாவின் புதிய இணைய தொடரான ஆக்ரி சச் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
வடக்கு தில்லியில் உள்ள புராரியை அடுத்த சந்த் நகரில் ஒரே குடும்பத்தில் 7 பெண்கள் உள்பட 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவம் நாட்டினையே உலுக்கியது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மராத்தி, பெங்காலி என பல மொழிகளில் இந்த தொடர் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: எதிர்நீச்சலுக்காக உயிரையும் கொடுப்பேன்: இயக்குநருக்கு ரசிகரின் வேண்டுகோள்!
தற்போது தமன்னா பந்த்ரா, வேதா ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...