எதிர்நீச்சலுக்காக உயிரையும் கொடுப்பேன்: இயக்குநருக்கு ரசிகரின் வேண்டுகோள்!

எதிர்நீச்சலுக்காக உயிரையும் கொடுப்பேன்: இயக்குநருக்கு ரசிகரின் வேண்டுகோள்!

ஞாயிறு உள்பட வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 9.30 மணிக்கு எத்ரிநீச்சல் ஒளிபரப்பாகிறது.
Published on


எதிர்நீச்சல் தொடருக்காக உயிரையும் கொடுப்பேன் என ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிடும் அளவுக்கு எதிர்நீச்சல் தொடர் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடர் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளம் தலைமுறையைச் சேர்ந்த ஆண்கள், பெண்களும் எதிர்நீச்சல் தொடருக்கு ரசிகர்களாக உள்ளனர். அந்த அளவுக்கு எதிர்நீச்சல் தொடர் சென்று சேர்ந்துள்ளது. 

ஞாயிறு உள்பட வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 9.30 மணிக்கு எத்ரிநீச்சல் ஒளிபரப்பாகிறது. இரவு நேரத் தொடர், டிஆர்பி பட்டியலில் முதன்மை இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. பிரைம் டைம் எனப்படும் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மட்டுமே டிஆர்பி பட்டியலில் முதலிடம் வகித்து வருவது வழக்கம். 

இந்நிலையில், எதிர்நீச்சல் தொடருக்கு வெளியிடப்படும் முன்னோட்ட (புரோமோ) விடியோக்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதில், ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிடுவதன் மூலம், அந்தத் தொடர் வரவேற்பு பெறுகிறதா? இல்லையா? என்பதை அறிந்துகொள்ளலாம்

அந்தவகையில் எதிர்நீச்சல் தொடருக்கு கருத்து பதிவிட்டுள்ள ரசிகர் ஒருவர், இறப்பதற்குள் எதிர்நீச்சல் போன்ற ஒரு தொடரில் நடிக்க வேண்டும். அப்படி நடித்து முடித்ததும் இறந்தாலும் இந்த ஜென்மத்திற்கு எனக்கு புண்ணியம் எனப் பதிவிட்டுள்ளார். 

மேலும், நடித்தால் இப்படிப்பட்ட தொடரில் நடிக்க வேண்டும் எனவும் மற்றொருவர் பதிவிட்டுள்ளார். 

இவ்வாறு, சின்னத்திரை தொடர்கள் மீது இளம்தலைமுறையினருக்கு இருந்த பார்வையை மாற்றும் பணியை எதிர்நீச்சல் தொடர் செய்துள்ளது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com