
லியோ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.
சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.
இதையும் படிக்க | தனி ஒருவன் - 2: இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் - 23 ஆம் தேதி நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த நிகழ்ச்சிக்கு நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பிரபலங்களுக்கு படக்குழு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...