
ஓணம் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ள நிலையில், கேரள மக்கள் புத்தாடைகள் அணிந்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரள மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம்.

தமிழக மக்களுக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகைபோல கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை மிகப் பெரிய பண்டிகையாக கருதப்படுகிறது.

கேரள மக்களால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் அஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை 10 நாள்களுக்குக் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், மலையாள நடிகைகள் பலரும் ஓணத்திற்கே உரித்தான புடவைகளில் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.


செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...