இந்த வாரம் செப்டம்பர் 1 ஆம் தேதி எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளதை என்பதைக் காணலாம். இந்த வாரம் ஆறு தமிழ் மொழி திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
குஷி
இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குஷி. இப்படத்தில் விஜய் தேவரக்கொண்டாவுக்கு சமந்தா ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாக உள்ளது.
கருமேகங்கள் கலைகின்றன
தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன. இந்தப் படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் ஈ.வீரசக்தி தயாரித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜா, யோகிபாபு, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
கிக்
கிக் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை தன்யா ஹோப் நடித்துள்ளார். இப்படத்துக்கு அர்ஜூன் ஜன்யா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லக்கி மேன்
யோகிபாபு நடிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லக்கி மேன். இப்படத்தில் யோகி பாபு உடன் வீரா பாபு, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ்.சிவாஜி, அமித் பார்கவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரங்கோலி
இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்கள் ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரங்கோலி'. இந்தப் படம் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பரம்பொருள்
அரவிந்த்ராஜ் இயக்கத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் பரம்பொருள். இப்படத்தில் கதாநாயகனாக அமிதாஷ் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் செப்.1ஆம் நாள் வெளியாக உள்ளது.
இதையும் படிக்க: அமிதாப் பச்சன் வீட்டிற்குச் சென்ற மம்தா பானர்ஜி! காரணம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்&டி 4வது காலாண்டு லாபம் 3% சரிவு!

மேற்கு வங்கத்தில் பாஜக வென்ற மறுநாளே திறக்கப்பட்ட பழமையான துர்கா கோயில்!

ரத்ன குமாரின் 29 படத்தின் புரோமோ விடியோ!

வெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு


