அன்றாட வாழ்க்கைக்கு வெளியே.. ரசிகர்களை வற்புறுத்தும் சின்னத்திரை நடிகை!

புதுக்கோட்டையிலிருந்து சரவணன். கிழக்கு கடற்கரை சாலை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அன்றாட வாழ்க்கைக்கு வெளியே.. ரசிகர்களை வற்புறுத்தும் சின்னத்திரை நடிகை!
Published on
Updated on
2 min read


காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்துவரும் நடிகை ஸ்ரீதேவி அசோக், குடும்பத்துடன் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு மலைப்பகுதிகளில் குடும்ப உறுப்பினர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். 

நடிகை ஸ்ரீதேவி அசோக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பொன்னி தொடரிலும் நடித்து வருகிறார். இதேபோன்று காற்றுக்கென்ன வேலி தொடரிலும் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். 

தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் ஸ்ரீதேவி, தற்போது அன்றாட வாழ்க்கையிலிருந்து சற்று ஓய்வெடுக்கும் வகையில், சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். பயணங்கள் மீது தீராத பிரியம் கொண்ட ஸ்ரீதேவி, நீலகிரி மலைப்பிரதேசங்களுக்குச் சென்றுள்ளார். 

சமூகவலைதளத்தில் மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்படக்கூடிய ஸ்ரீதேவி, தனது சுற்றுலா அனுபவங்களை படங்களாக பதிவிட்டு ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து வருகிறார். 

அந்தவகையில், மலையேற்றம் சென்றதைப்போன்ற உடையில் அவர் சில புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதில் கணவர், குழந்தைகளுடன் இயற்கை சார்ந்து தனது தற்காலிக ஓய்வை அனுபவித்து வருகிறார். 

அன்றாட வாழ்க்கைக்கு வெளியே, செல்போன் டவர் கூட கிடைக்காத இடங்கள் பெருமகிழ்ச்சியுடையவை. இங்கு சிறந்த அனுபவம் கிடைக்கிறது. உங்கள் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான தங்குமிடங்களும் இங்கு அமைந்துள்ளன. குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்கள் மிகவும் நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறது. அனைவருக்கும் தேவையான ஒரு அனுபவம் இவை. இந்த மழைக்காலத்தில் பார்த்து ரசிக்க வேண்டிய சிறந்த இடம் எனப் பதிவிட்டுள்ளார். 

நடிகை ஸ்ரீதேவி அசோக் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். புதுக்கோட்டையிலிருந்து சரவணன். கிழக்கு கடற்கரை சாலை போன்ற படங்களில் நடித்துள்ளார். செல்லமடி நீ எனக்கு தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com