
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடர் 500 எபிஸோடுகளைத் தாண்டியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இல்லத்தரசிகளை மட்டுமில்லாமல், இளம் தலைமுறையைச் சேர்ந்த ஆண்கள் - பெண்களையும் எதிர்நீச்சல் தொடர் கவர்ந்துள்ளது.
இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர், டிஆர்பி பட்டியலில் முதலிடத்தைப் பெறுவது இதுவே முதல்முறை. எதிர்நீச்சல் தொடர் தமிழில் 2022 பிப்ரவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
பிற்போக்குத்தனங்களை காட்டும் தொடர்களுக்கு மத்தியில், படித்த பெண்கள் திருமணத்துக்கு பிறகு சந்திக்கும் பிரச்னைகளையும், முற்போக்கான தீர்வுகளையும் கொடுக்கும் தொடராக எதிர்நீச்சல் உருவாகிவருகிறது.
தமிழ்நாட்டு மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற எதிர்நீச்சல் தொடர் தற்போது 5 மொழிகளில் எடுக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
தற்போது தெலுங்கு (உப்பென்னா), மலையாளம் (கனல் பூவு), கன்னடம் (ஜனனி), பெங்காலி (அலோர் தீக்கனா), மராத்தி (சபாஷ் சன்பை) மொழிகளில் எதிர்நீச்சல் கதையைத் தழுவி தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.