மாமன்னன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் வடிவேலுக்கு புதிய திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அவர் நடிப்பில் தயாரான ‘சந்திரமுகி - 2’ திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. மேலும், தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்துள்ளார்.
மாமன்னனில் மிகச்சிறப்பாக நடித்த வடிவேலுவை இனி நல்ல கதாபாத்திரத்திற்காகவும் பயன்படுத்த இயக்குநர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்காக, நிறைய கதைகளை வடிவேலு கேட்டு வருகிறார்.
இதையும் படிக்க: விஜய் - 68 படத்தில் சிம்ரன்?
இந்நிலையில், தனக்கான மார்க்கெட் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்ததை உணர்ந்த வடிவேலு தன் சம்பளத்தையும் ரூ.5 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.