‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல். பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள்.
அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருக்கின்றன.

இதையும் படிக்க: திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்: நடிகை ஷீலா அறிவிப்பு!
இயக்குநரின் சொந்தத் தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்தில் பிரபல நடிகர் சன்னி தியோலின் சகோதரரான பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.
தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் டிச.1 உலகளவில் பிரம்மாண்டமாக இப்படம் வெளியானது.
படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் முதல் நாளில் ரூ.116 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: தந்தையை கண்டடைதல்: அனிமல் - திரைவிமர்சனம்!
அனிமல் படம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட ஆலியா பட் ராஷ்மிகாவை புகழ்ந்து பேசியுள்ளார். அதில், “சந்தீப் வங்கா உங்களைப் போன்ற ஒரு இயக்குநரை பார்க்கவே முடியாது. படத்தில் வரும் பீட்ஸ் என்னை அதிர்ச்சி, மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பல நாள்களுக்கு முன்மாதிரியான காட்சிகளாக இருக்கும்.

ராஷ்மிகா மந்தனா நீங்கள் படத்தில் மிகவும் அழகாகவும் நேர்மையாகவும் இருந்தீர்கள். நேரில் சொல்லியதுபோல் அந்தக் காட்சியில் மிகவும் பிடித்திருந்தது. மிகவும் சிறப்பு வாய்ந்த காட்சியாகவும் ஊக்கமளிக்கும் விதமாகவும் இருந்தது. முழுமையாக க்ரஷ்மிகா சங்கத்தில் இணைகிறேன்.
பாபி தியோல் அனிமல் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தவாரக இருந்தார். எப்போது ஸ்கிரினில் வந்தாலும் ஒரு அற்புதம் நிகழ்கிறது” எனப் பாராட்டி பதிவிட்டிருந்தார்.

ராஷ்மிகாவை இந்தியாவின் நேஷ்னல் க்ரஷ் என்பார்கள். மேலும் ரசிகர்கள் இணையத்தில் க்ரஷ்மிகா எனவும் செல்லமாக அழைப்பது வழக்கம். பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் இந்த க்ரஷ்மிகாவை பயன்படுத்தியது ராஷ்மிகா ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரங்கம் குலுங்கும் அன்பே டயானா: திரை விமர்சனம்

கள்ளு கடைத் திறப்புக்கு எதிர்ப்பு! கேரள முதல்வருக்கு 10 வயது சிறுமி கடிதம்!

தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர விவகாரம்! ஊடகரிடம் விசாரணை பற்றி காவல் துறை விளக்கம்!

ஐஆா்பிஎன் உதவி ஆய்வாளா் பணி: 1,788 விண்ணப்பங்கள் ஏற்பு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



